Type to search

International News

புருண்டி ஜனாதிபதி மாரடைப்பால் மரணம்!

Share

புருண்டி நாட்டின் ஜனாதிபதி பியர் குருண்சிஸா மாரடைப்பால் மரணமானதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.


கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்று புருண்டி.
இந்த நாட்டின் ஜனாதிபதியாக 55 வயது பியர் குருண்சிஸா இருந்து வந்தார்.

இந்நிலையில் பியர் குருண்சிஸாவுக்கு நேற்று முன்தினம் (08.06.2020) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.


இதனால் கருசியிலுள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

புருண்டி அரசு டுவிட்டர் பக்கத்தில், அரசாங்கம் புருண்டி மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் மிகுந்த துக்கத்துடன் ஜனாதிபதி; பியர் குருண்சிஸா மரணம டைந்த செய்தியை அறிவிக்கிறது என்று பதிவிட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *