Type to search

International News

கொரோனாவால் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மரணம்

Share

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உயிரிழந்தார்.

ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த 2 ஆம் திகதி சென்னை குரோம்பேட்டையிலுள்ள ரேலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதனையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் வாயிலாக ஒட்சிஜன் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை (10.06.2020) காலை 8.05 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

1958 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் திகதி பிறந்த ஜெ.அன்பழகன் இன்று அவரது பிறந்த தினத்திலேயே உயிரிழந்தார்.


பி.ஏ.பொருளாதாரம் படித்துள்ள ஜெ.அன்பழகன் கடந்த 2001 இல் முதன்முறையாக சென்னை தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 2011 மற்றும் 2016 தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு ஜெ.அன்பழகன் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *