Type to search

Sport

அமைதி காப்பதும் துரோகமே; இனவெறிக்கு எதிராக நயோமி

Share

சில நேரங்களில் அமைதியாக இருப்பது கூட ஒருவகையில் துரோகச் செயல்தான், எனத் தெரிவித்திருக்கிறார் நயோமி ஒசாகா.

அமெரிக்காவில் பொலிஸhரால் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிலொய்ட் கொல்லப்பட்டனார்.

இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு விளையாட்டு நட்சத்திரங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.

முன்னணி ரென்னிஸ் வீராங்கனை நயோமி ஒசாகாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவரது அம்மா ஜப்பான், அப்பா ஹெய்ட்டியை (கறுப்பர் இனம்) சேர்ந்தவர்கள். இவர்
கூறியதாவது,

சில நேரங்களில் அமைதியாக இருப்பது கூட ஒருவகையில் துரோகச் செயல் தான்.

இதுபோன்ற செயல் நமக்கு நடக்கவில்லை என்பதால், மீண்டும் அப்படி நடக்காது என்று அர்த்தம் இல்லை. அமைதியாக இருக்க முடியாது.

கடைகளை சூறையாடுகின்றனர் என்ற செய்தியை படிக்கும்முன், நிராயுதபாணியாக இருந்த கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒருவர் எப்படி கொல்லப்படுகிறார் என்பதை பாருங்கள், பிலொய்ட் மரணத்துக்கு நீதி வேண்டும் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *