Type to search

Medical

ஆண்களைக்காட்டிலும் பெண்கள் அதிகம் குண்டாவது ஏன்?

Share

நெடுநாட்களாக பெண்கள் மத்தியில் நிலவும் சந்தேகத்தை தற்போது மருத்துவஅறிவியலும் உறுதி செய்துள்ளது.

உடலமைப்பின் படி பெண்கள் ஆண்களைவிட விரைவாக கொழுப்பை ஏற்றி, மிக மெதுவாக அதை இழக்கிறார்கள் என்று தற்போது விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பூப்பெய்யும்போது சிறுமிகளுக்கு எடை அதிகரிப்பதும், மாறாக பருவமடையும் பையன்கள் மெலிந்துபோவதும் இயற்கை என்று கேள்விப்பட்டிருப்போம்.

18 வயதில் சிறுமிகள் 20லிருந்து 25 சதவீதம் வரையும், சிறுவர்கள் 15லிருந்து 18 சதவீதம் வரை பருமனில் கூடுகிறார்கள்.

அதற்கடுத்து பருவ வயது கடந்து அல்லது நடுத்தர வயதில், இரு பாலரிடத்துமே 40 சதவீத எடை அதிகரிக்கிறது.

அதுவே திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகு பெண்களின் எடை இன்னும் கூடிக்கொண்டேதான் போகிறது.

இதற்கு அடிப்படைக்காரணம் என்ன?

நவீன சிகிச்சைகள் என்ன?

‘‘இயற்கையாகவே பெண்கள் கடுயான வேலைகளில் ஈடுடாததால் ஆண்களைவிட, மிக மெதுவான வளர்சிதை மாற்றம் பெண்களிடத்தில் நடைபெறுகிறது.

சுவாசம்இ உணஊ சமிபாடு மற்றும் உடற்கழிவுவகற்றுதல் போன்ற அடிப்படை செயல்பாடுகளுக்காக பெண்கள் குறைந்த அளவே கலோரிகளை வீணாக்குகிறார்கள்.

பெண்களோடு ஒப்பிடும்போது உடலின் அடிப்படை செயல்பாடுகள் காரணமாக ஆண்கள் அதிக கலோரிகளை வீணாக்குகின்றனர்.

சில பெண்களுக்கு தைரொய்ட் ஓமோன் பெரிதும் குறைவாக சுரப்பதால் வரும் ஹைப்போ தைரொய்ட் பிரச்னையும் கூட உடல்பருமனுக்கு காரணமாகலாம்.

தைரொய்ட் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்துகொள்வதால் உடல் பருமன் குறைய ஆரம்பிக்கும்.

சில பெண்களுக்கு வரக்கூடிய பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னையால் உடல் எடை கூடலாம்.

அதுபோல நேர்மாறாக உடல்பருமனால் பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை வரும். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது.

உடல் பருமனால் கருவுறாமை (Infertility) பிரச்னையும் ஏற்படும்.

பாலிசிஸ்டிக் ஓவரி குறைந்தால் தானாகவே உடல் எடையும் குறைந்துவிடும்.

அடுத்து கர்ப்பமுறும் தாய்மார்கள், கருவில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து உணவருந்துவதால் 10 மாதங்கள் வரையிலும் உடல் எடை கூடிக்கொண்டே போகும்.

பிரசவத்திற்குப் பிறகும் அடிவயிற்று தசைகள் தளர்வடைவதால் சில பெண்களுக்கு வயிறு பெரிதாகி உடல் பருமனாகிவிடுவார்கள்.

பரம்பரைத்தன்மை காரணமாகவும் குடும்ப வழிவழியாக பெண்கள் குண்டாக இருப்பார்கள்.

இன்னொன்று அதிகமாக உணவு எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால், அதற்குத் தகுந்த உடல் உழைப்பில் ஈடுபட மாட்டார்கள்.

இதனால் கலோரிகள் எரிக்கப்படாமல் நாளடைவில் உடல்பருமன் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்.

மற்றைய காரணம் ஈஸ்ட்ரஜன் ஓர்மோனும் பெண்களின் எடையில் பெரும் பங்கு வகிக்கிறது.

இந்த ஓர்மோன் சுரப்பில் சமநிலையற்ற தன்மையாலும் சில பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.

இதற்கும் ஈஸ்ட்ரஜன் ஓர்மோன் ற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் பருமனிலிருந்து மீள வாய்ப்புண்டு.

வாழ்க்கை முறையில் வேலைக்கு போகும் பெண்களுக்கும் சரி, வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் சரி, வீட்டுப்பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு, கூடுதலாக பணியிட சுமை என எல்லாம் சேர்ந்துகொண்டு தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்ய நேரம் போதாமை போன்ற சில நடைமுறைப் பிரச்னைகள் இருப்பதால், அவர்களுக்கு தமது உடல் எடையை பராமரிப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.

இயற்கையில் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் சதை அதிகமாக போடும்.

பொதுவாக ஆண்களுக்கு இடுப்பிலிருந்து வயிறு வரை சதைபோட்டு, அப்பிள் வடிவ உடலை கொண்டிருப்பார்கள்.

இந்த அமைப்பே ஆண்களின் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அறியப்படுகிறது.

அதுவே பெண்களுக்கு பேரிக்காய் வடிவ உடலமைப்பு இருக்கும்.

பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் சதை குறைவாகவும், இடுப்பிலிருந்து கீழ் உடலில் அதிகமாகவும் இருக்கும்.

ஆனால், ஒரே அளவிலான உடல் கொழுப்புள்ள இருபாலருக்கும் வெவ்வேறு உடல்நல அபாயங்கள் வரலாம்.

உடல் பருமனான ஆண்களுக்கு அதிக இரத்த ஓட்டக்குறைவு(Systolic) மற்றும் இரத்தநாள விரிவு(Diastolic) இரத்த அழுத்தங்கள், அதிக அளவு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்டுகள் இருக்கின்றன.

இருந்தாலும் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை எளிதாக கரைத்துவிட முடியும் என்பதால் ஆண்கள் விரைவில் உடல் எடையை குறைத்துவிடலாம்.

ஆனால் இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் உள்ள கொழுப்பை கரைப்பது சற்று கடினமாததாலும், பிரசவத்திற்குப் பின் தன் உடலை பராமரிப்பதில் பெண்களுக்கு உள்ள நேரக் குறைவாலும், கர்ப்பத்தின்போது எடை கூடும் பெண்கள் பின் எடை இழப்பது எளிதான விஷயம் இல்லை.

கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.

பொதுவாக பெண்கள் ஆண்களைவிட உயரம் குறைவாக இருப்பதால், பெரும்பாலும் பெண்களுடைய BMI (Bio Mass Index) அதிகம் இருக்கும். ஆண்களுக்கு BMI குறைவாக இருக்கும். BMI 25 ஆக இருப்பது போதமான அளவு.

25க்கு மேல் இருந்தால் அவர்கள் குண்டானவர்கள்.

அதுவே 27-30 இருந்தால் ஆபத்து.

30-க்கு மேல் இருந்தால் அவர்களுக்கு அதீத உடல்பருமன் நோய் (ழுடிநளவைல) இருப்பது உறுதி.

ஆகவே உடல் பருமன் தொடர்பில் பெண்கள் அக்கறைகொள்ள வேண்டும். ஏனெனில் நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் இதயநோய்களுக்கு உடல் பருமனே முக்கியகாரணமாகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *