Type to search

Medical

30 வயதைத் தாண்டிய கர்ப்பத்தால் பெண்களுக்கும் சிசுக்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகள்

Share

பொருத்தமான வயதில் திருமணம் செய்யாமல் பெண்கள் காலங்கடந்து 27 வயதுக்கு பிறகு திருமணம் செய்யும் போதும் குழந்தைபேற்றையும் சில ஆண்டுகள் தள்ளி போடும் போதும் கர்ப்பப்பையில் கருமுட்டை வளர்ச்சி குறைவடைவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல் ஆண் துணையின் வயதும் அதிகரிக்கும் போது சுக்கிலத்தில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவும் பலமிழந்தும் காணப்படுகிறது.

இதனால் குழந்தை பேறு கேள்விக்குள்ளாகிறது.

தெய்வாதீனமாக கருத்தரித்தாலும் பிரசவக்காலத்தில் பலவித சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.

எனின் 30 வயதுக்கு பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்கள் கர்ப்பக்காலத்தில் கவனமாக இருக்க என்ன செய்யலாம்?

கருச்சிதைவுவானது பெண்களை உடல் மற்றும் உள ரீதியாக பலவீனப்படுத்தகூடியது.

கருச்சிதைவு உண்டாகும் பெண்களில் 18 வீதம் பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கர்ப்பக்காலத்தில் ஹோர்மோன் மாற்றங்கள் உண்டாகும் என்றாலும் இந்த வயதில் கருத்தரிக்கும் போது அவை கருச்சிதைவை ஊக்குவிக்கவும் வாய்ப்புண்டு.

கருத்தரித்தவுடன் அடிக்கடி எச்சரிக்கை உணர்வுடன் உடலில் உண்டாகும் மாற்றத்தை கவனிக்க வேண்டும்.

சிறிதளவு வித்தியாசம் இருந்தாலும் தாமதிக்காமல் மகப்பேற்று வைத்தியரை அணுக வேண்டும்.

கருவின் வளர்ச்சி தொடர்பில் வைத்தியரின் மேலான கவனிப்பு தேவை.

அத்தோடு கருவுற்ற பெண்களும் போசாக்குமிக்க உணவு மற்றும் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்வதன் மூலம் கருச்சிதைவு பிரச்சனையிலிருந்து விடுபடமுடியும்.

கர்ப்பக்கால நீரிழிவு நோய் தற்காலிகமானது.

ஆனால் இவை பிரசவத்தில் சிக்கல் மற்றும் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு போன்றவற்றை உண்டாக்கிவிடும்.

இதனால் 24 வாரங்களில் உண்டாகக்கூடிய நீரிழிவு முன்கூட்டியே வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகிறது.

மேலும் 33 வயதுக்கு மேல் கருவுற்றிருக்கும் பெண்கள் மற்ற வயது குறைந்த கர்ப்பிணிகளை காட்டிலும் முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம் இந்த நோயை வராமலும் வந்தால் கட்டுக்குள் வைக்கவும் முடியும்.

நீரிழிவு நோய் இருப்பவர்கள் போசாக்கான உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும்.

ஏலவே பலவீனமாக இருக்கும் இந்த பெண்கள் நீரிழிவு வந்தால் அதை எதிர்கொள்வதோடு உடல் சோர்வடையாமல் கருவுக்கு போசாக்கு குறையாமல் உணவு எடுத்துகொள்வதையும் தவிர்க்காமல் செய்யவேண்டும்.

கர்ப்பக்காலத்தில் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க கூடியதுதான்.

ஆயினும் இந்த வயதில் கருத்தரிக்கும் பெண்கள் இரண்டு மடங்கு உயர் இரத்த அழுத்த நோய்க்கு ஆளாக வாய்ப்புண்டு.

10 முதல் 20வீதம் வரை இந்த பாதிப்பு உண்டாக அதிக வாய்ப்புண்டு.

இந்த இரத்த அழுத்த பிரச்சனையால் கருவின் மீது அழுத்தம் அதிகமாகி பிரசவக்காலத்தில் சிக்கலை உண்டாக்குகிறது.

சில நேரங்களில் குறைப்பிரசவம் ஏற்படவும் வாய்ப்புண்டாகிறது.

அத்தோடு சுகப்பிரசவத்தை காட்டிலும் அறுவை சிகிச்சை செய்வது அதிகமாகிறது.

மனதை இலேசாக வைத்துகொண்டு மருத்துவரின் ஆலோசனையோடு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம்.

கருத்தரிப்பதில் பிரச்சனை என்று சொல்லும் வயதில் கருத்தரித்தால் ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.
இரட்டை குழந்தைகள், சிலருக்கு மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட கருக்கள் வளரவும் வாய்ப்புண்டு.

ஸ்கேன் செய்யும் போது வயிற்றில் இரட்டை குழந்தை என்பது உறுதியாகிவிட்டால் கர்ப்பக்காலம் முழுவதும் 3 மடங்கு கவனத்துடன் இருக்க வேண்டும்.

தாய், சேய் இருவருக்குமே போசாக்கு குறைபாடு இல்லாமல் கவனித்துகொள்ள வேண்டும்.

பிரணங்களை தவிர்க்க வேண்டும்.

நிற்கும் போதும் நடக்கும் போதும் அமரும் போதும் படுக்கும் போதும் ஒவ்வொரு முறையும் கூடுதல் கவனத்தோடு மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுதல் வேண்டும்.

அப்படி செய்தால் குழந்தையின் ஆரோக்கியம் தாயின் ஆரோக்கியம் போன்றவற்றை பாதுகாக்க முடியும்.

பெண்கள் உரிய வயதில் கருத்தரித்து பிரசவக்காலத்தை எதிர்நோக்கும் போது ஆரோக்கியமான சுகப்பிரசவம் நிகழும்.

21 வயது முதல் 27 வயதுக்குள் பிரசவம் எனின் உடலும் ஒத்துழைக்கும்.

இதிலிருந்து இரண்டு வருடங்கள் முன் பின் ஆனாலும் பிரச்சனையில்லை.

ஆனால் 33 வயதுக்கு பிறகு கர்ப்பப்பையில் இருந்து குழந்தையை வெளியேற்ற போதுமான பலத்தை கருப்பை கொண்டிருக்காது.

கர்ப்பப்பை வாய் திறப்பதிலும், குழந்தையின் அசைவிலும் மாற்றங்கள் உண்டாகும்.

உடல் பலம் இழந்து கர்ப்பப்பை பலம் குறைந்த நிலையில் சுகப்பிரசவம் நிச்சயம் பாதுகாப்பானதாகவோ, இயல்பாகவொ இருக்காது என்பதால் சத்திர சிகிச்சையின் மூலம் பிரசவம் நடக்க அதிக வாய்ப்புண்டு.

தாமதமான கருத்தரிப்பு மகிழ்ச்சியை கொடுத்தாலும் குழந்தையின் வளர்ச்சியையும் மனதில் கொள்வது அவசியம்.

பிறக்கும்1000 குழந்தைகளில் 1 குழந்தை டவுன் சிண்ட்றம் எனும் பிறப்புரிமையியல் நோயை கொண்டிருக்கிறதாம்.

உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடை கொண்டிருக்ககூடிய இந்த நோய் உங்கள் குழந்தையை தாக்கும் வாய்ப்பு உண்டு.

அதே போன்று முதுகெலும்பு வலுவின்மைக்கும் வாய்ப்புண்டு என்றாலும் இதை தவிர்க்க குழந்தையின் வளர்ச்சிக்கு ஸ்கேன் செய்வதும், உரிய சிகிச்சை மேற்கொள்வதும் அவசியம்.

இதனால் அதை குணப்படுத்தவும் சிகிச்சை மேற்கொள்வதும் சாத்தியமாகும்.

மிக குறைந்த சதவீதமாக குழந்தை அதிக பாதிப்புக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே வைத்தியர் கருக்கலைப்புக்கு வலியுறுத்துவார் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.

இக் குறைபாடுகள் எல்லாமே பிரசவ காலத்தில் தாய் சேய் இருவரையும் பாதிப்புக்குள்ளாக்குபவை.

தாமதமான கருத்தரிப்பு உண்டாக்கும் உபாதைகளை சிந்தித்து உங்கள் குழந்தைப்பேற்றை தள்ளிப்போடாதீர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *