Type to search

Local News

புலிகளின் சீருடைகள், துப்பாக்கியுடன் முகமாலையில் எலும்புக்கூடுகள்!

Share

கண்ணிவெடியகற்றலின்போது சிக்கின 26 ஆம் திகதி அகழ்வுப் பணிக்கு உத்தரவு

முகமாலைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள், துப்பாக்கிகள் என்பவற்றுடன் மனித எலும்புகளும், எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடியகற்றும் பணிகளின்போது நேற்று இவை கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக பளைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

எதிர்வரும் 26ஆம் திகதி அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறும் அவர்
உத்தரவிட்டுள்ளார்.

இந்த எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதி முகமாலைப் போர் பிரதேசத்தின் முன்னரங்கப் பகுதி எனக் கூறப்படுகின்றது.

எலும்பு எச்சங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகள் போன்றனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *