Type to search

Local News

மழைவெள்ளத்தினுள் மூழ்கியுள்ள தாழ்நிலப்பகுதிகள் : மக்கள் இடம்பெயர்வு

Share

நாட்டில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன்,

இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, கிரியெல்ல, எலபாத்த, குருவிட்ட, எஹலியகொடை, பலாங்கொடை, ஓப்பநாயக்க, பெல்மதுளை உட்பட மேலும் சில தாழ்நில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் பெரும்பாலான தாழ்நில பகுதிகளில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில் தத்தமது வீடுகளில் உள்ள பொருட்களை மாற்று இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இரத்தினபுரி நகரை அண்மித்த அல் மக்கியா பாடசாலை வீதி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள்,

இரத்தினபுரி வெரலுப்ப வீதி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள்,

இரத்தினபுரி சீவலி மைதானப் பகுதிகள் மற்றும் இரத்தினபுரி பட்டுகெதர, திருவானக்கெட்டிய ஆகிய தாழ்நில் பகுதிகள்

மற்றும் மாவளை பிரதேசத்தின் சில தாழ்நில பகுதிகள் உட்பட இரத்தினபுரி மாவட்டத்தில் மேலும் பல தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கி உள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *