Type to search

Local News

கொட்டும் மழையால் அவதிப்படும் சந்தை வியாபாரிகள்

Share

இன்று முதல் கொரோனா ஊரடங்கிலிருந்து இலங்கை மீண்டுள்ள நிலையில் பொதுச்சந்தைக் கட்டிடங்கள் திறக்கப்படாமல் சந்தைகள் ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே நடைபெறுகின்றன.

கல்வியங்காடு சந்தைப்பகுதி

அலைமோதும் பொதுமக்களை சமூகசமூக விலகலுக்குப்படுத்த மாநகரசபை மற்றும் பிரதேசசபைகளால் குறித்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மரக்கறி மற்றும் கடலுணவு வியாபாரிகள் குறித்தொதுக்கப்பட்ட இடங்களில் வியாபாரம் செய்யும் நிலையில் இன்று மழை பெய்ததால் சிரமத்திற்கு உள்ளானமையை காண முடிந்தது.

இதனால் அவர்களது விற்பனைப் பொருட்களை பாதுகாக்க முடியாதுள்ளதாகவும் பெரிதும் வருத்தப்பட்டனர்.

கல்வியங்காடு சந்தைப்பகுதி

இந்நிலைமையை திருநெல்வேலி மற்றும் கல்வியங்காடு உட்பட்ட யாழ்ப்பாண பிரதான பொதுச்சந்தைகளில் காணக்கூடியதாக இருந்தது.

பொதுச்சந்தைகளை திறப்பதுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மக்களை கட்டுப்படுத்தினால் பேருதவியாக இருக்கும் என்பது குறித்த வியாபாரிகள் முன்வைக்கும் வேண்டுகோளாக இருந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *